

இந்திய ரிசர்வ் வங்கி, 2026-ம் ஆண்டு ஏப்ரல் l-ம் தேதி தொடங்கி ஐந்து நிதியாண்டுகளுக்கான வட்டி விகிதக் கொள்கையை (ரெப்போ வட்டி) வகுக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக புதிய பணவீக்க இலக்கை நிர்ணயிப்பது குறித்த கருத்துகளை அனுப்புமாறு வருமானம் ஈட்டுபவர்கள், நுகர்வோர், சேமிப்பாளர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
நெகிழ்வான பணவீக்க இலக்கு (Flexible Inflation Target Regime - FIT) என்று அழைக்கப்படும் வட்டி விகித கொள்கை கடந்த 2016-ம் நிதியாண்டிலிருந்து அமலில் உள்ளது. இது 1931-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டத்தில், 2015-ல் மேற்கொள்ளப்பட்ட ஒரு சட்டப்பூர்வ திருத்தத்தால் செயல்படுத்தப்பட்டது.