

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவும் சீனாவும் முதல் இரண்டு இடங்களில் உள்ளன. இவை நீண்ட வரலாறு உள்ள இரு பெரும் அண்டை தேசங்கள்.
பல நூறு ஆண்டுகளாக கலாச்சார மற்றும் வியாபார தொடர்புகள் இருந்தபோதும், சீனாவில் 1949-ம் ஆண்டு கம்யூனிச அரசு வந்த பின், இருநாட்டு உறவுகளில் விரிசல் ஏற்பட்டது. 1962-ல் சீனா இந்தியா மீது போர் தொடுத்தது.