

உலகம் முழுவதும் செயல்படும் முன்னணி துரித உணவு நிறுவனங்களில் ஒன்று மெக்டொனால்ட்ஸ் (McDonald's). இந்நிறுவனத்துக்கு இந்தியா உட்பட 119 நாடுகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகள் உள்ளன.
இந்த பிராண்ட் பர்கர், பிரெஞ்ச் ப்ரைஸ் ஆகிய உணவு வகைகளுக்கு பெயர் பெற்றது. அத்துடன் உள்ளூர் மக்களின் சுவை மற்றும் பாரம்பரியங்களுக்கு ஏற்பவும் உணவுப் பொருட்களை தயாரித்து வழங்குவதுதான் இந்நிறுவனத்தின் சிறப்பு.