

மூன்றாம் தரப்பு நாணயங்களை (எ.கா. அமெரிக்க டாலர்)நம்பியிருக்காமல் இந்திய ரூபாயை சர்வதேசமயமாக்கவும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் நிதி தீர்வுகளை ஊக்குவிக்கவும் ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, புதிய வோஸ்ட்ரோ சுற்றறிக்கை மூலம் இரண்டு முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது. முதலில், சில வங்கிச் சொற்களைத் தெளிவுபடுத்துவோம் - வெளிநாட்டு நாணய வங்கி பரிவர்த்தனைகளில் 'நோஸ்ட்ரோ' மற்றும் 'வோஸ்ட்ரோ' என இரண்டு சொற்கள் பயன்படுத்தப்படுகின்றன:
* நோஸ்ட்ரோ (லத்தீன் மொழியில் நம்முடையது) என்பது வெளிநாட்டு வங்கிகளில் வெளிநாட்டு நாணயக் கணக்குகளைத் திறக்கும் இந்திய வங்கிகளைக் குறிக்கிறது.