

தீமேட்டிக் என்பது டிஜிட்டல், உட்கட்டமைப்பு போன்ற நிலைத்தன்மை உடைய ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த நிறுவனங்களில் அதிகமுதலீடு செய்யும் ஒரு பரந்த நோக்கங்களைக் கொண்ட ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட் திட்டமாகும். பெரிய பொருளாதார வாய்ப்புகளை அடையாளம் கண்டு அவற்றுடன் முதலீடுகளை சீரமைப்பதை சுற்றி கட்டமைக்கப்பட்ட ஒரு வளர்ந்து வரும் உத்தியும் தீமேட்டிக் முதலீட்டுக்கு சிறந்த உதாரணமாகும்.
குறிப்பாக, டிஜிட்டல் மாற்றம், சுகாதார பராமரிப்பு கண்டுபிடிப்பு என பொதுவான ஒரு கருப்பொருளை சுற்றி தொடர்புடைய துறைகள் மற்றும் பங்குகளை இந்த தீமேட்டிக் முதலீடு குறிவைக்கிறது. எனினும், இந்த வகை முதலீட்டிலும் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. இதில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் என்பது பெரிய பொருளாதார காரணிகளுக்கும் துறையின் செயல்திறனுக்கும் இடையிலான தொடர்பை டிகோட் செய்வது. நிதி ஊக்க சுழற்சிகளின்போது உட்கட்டமைப்பு துறை உயரக்கூடும். ஆனால், கொள்கை செயலற்ற தன்மையின்போது இது தேக்கமடையக்கூடும்.