

இந்தியா முழுவதும் 76,000 மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 63% தனியார் துறையைச் சேர்ந்ததாகும். ஆயிரம் பேருக்கு மூன்று மருத்துவமனை படுக்கைகள் இருக்க வேண்டும் என்பது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரை ஆகும். இப்போது 1,000 பேருக்கு 1.3 என்ற அளவில்தான் இருக்கின்றன. எனவே, கூடுதலாக 1.7 படுக்கைகள் தேவைப்படுகின்றன.
ரியல் எஸ்டேட் ஆலோசனை நிறுவனமான நைட் ஃப்ராங்க் இண்டியா (Knight Frank India) கடந்த 2023-ல் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் உள்ள 142 கோடி மக்களின் ஆரோக்கியத்தைப் பேணுவதற்கு மேலும் 200 கோடி சதுர அடி இடமும், மருத்துவமனைகளில் 24 லட்சம் படுக்கை வசதியும் தேவைப்படும் எனக் குறிப்பிட்டிருக்கிறது.