

இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தியாவில் பூ விற்பனையாளர் முதல் ஆட்டோ ஓட்டுநர் வரை இதைப் பயன்படுத்துகின்றனர். இது சில்லறை பிரச்சினைக்கு சிறந்த தீர்வாக உள்ளது. மாதந்தோறும் யுபிஐ பரிவர்த்தனை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் சிறு வணிகத்தில் ஈடுபட்டு வரும் காய்கறி வியாபாரிக்கு அண்மையில் ரூ.29 லட்சம் ஜிஎஸ்டி செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனால் சிறு வணிகர்கள் தற்போது யுபிஐ பரிவர்த்தனையிலிருந்து மீண்டும் ரொக்க பயன்பாட்டுக்கு மாற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.