

செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) என்பது நான்காவது தொழில் புரட்சியின் முக்கிய தொழில்நுட்பங்களில் ஒன்றாகும். இதில் இன்டர்நெட் ஆப் திங்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மெஷின் லேர்னிங் ஆகியவை மற்ற முக்கிய தொழில்நுட்ப தூண்கள் ஆகும். இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), அடுத்த ஓராண்டில் தனது ஊழியர் எண்ணிக்கையை 2% (12,000 பேர்) வரையில் குறைக்க திட்டமிட்டுள்ளது. ஏ.ஐ. வரவுதான் இதற்குக் காரணம் என பரவலாக பேசப்படுகிறது.
இதை டிசிஎஸ் தலைமைச் செயல் அதிகாரி மறுத்தாலும், ஏ.ஐ. பற்றிய ஆய்வுகள் செல்லும் பாதையைப் பார்த்தால் இந்த சம்பவம் எதிர்காலத்தில் நடக்கப்போகும் மாற்றங்களுக்கு ஒரு முன்னோட்டம் என்றே கருதலாம். திறமை பொருத்தமின்மை அல்லது பணி வழங்க முடியாத சூழல்தான் ஆட்குறைப்புக்கு காரணம் என டிசிஎஸ் கூறுகிறது.