

ப்ளூ, கிரே காலர் பணியாளர்களில் 5 பேரில் ஒருவர் மட்டுமே பெண்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. நீலம் எனப்படும் ப்ளூ காலர் பணி என்பது உடல் உழைப்பு மட்டும் சார்ந்த வேலை. அதேபோன்று, சாம்பல் எனப்படும் கிரே காலர் வேலை என்பது உடல் உழைப்புடன் தொழில்நுட்ப அறிவும் ஒருங்கமைந்தது. பொதுவாக ப்ளூ, கிரே காலர் ஜாப் என்பது உற்பத்தி, தளவாடங்கள், சில்லறை விற்பனை, சுகாதாரம், நிதி சேவைகள் துறை சார்ந்த வேலை வாய்ப்புகளாகும்.
இதுபோன்ற தொழில்கள்தான் ஒரு நாட்டின் வளர்ச்சியில் முதுகெலும்பாக திகழ்கின்றன. ப்ளூ, கிரே காலர் பணிகளில் பெண்களின் ஒட்டுமொத்த பங்கு 2020-21-ல் 16 சதவீதமாக இருந்த நிலையில், 2023-24-ல் 19 சதவீதமாக சற்று உயர்ந்துள்ளது.