

அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 25% வரி விதிக்கப்படும் என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துவிட்டார். அது தவிர, அபராதமாக மேலும் ஒரு தீர்வையும் உண்டு என்றும் சொல்லியிருக்கிறார். ஆனால் எவ்வளவு என்று தெரிவிக்கவில்லை. இந்தியாவுக்கு 25% ஏன் என்பதற்கான காரணமாக அவர் கூறுவது, இந்தியா அதன் சந்தைகளை அமெரிக்க வியாபாரிகளுக்கு திறந்துவிட மறுக்கிறது என்பதுதான்.
இந்தியா அதிக அளவில் அமெரிக்க பொருட்களுக்கு வரி போடுவதுடன், மரபணு மாற்றம் செய்த விவசாய மற்றும் பால் பொருட்களுக்கு தடை விதிக்கிறது என்று கோபப்படுகிறார் ட்ரம்ப்.