

அமெரிக்காவுக்கு ஸ்மார்ட்போன்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. வரி விதிப்பு அதிகரிப்பு செய்யப்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் சீனாவின் உற்பத்தி விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை இது பிரதிபலிப்பதாக உள்ளது.
அமெரிக்கா இரண்டாவது காலாண்டில் இறக்குமதி செய்த ஸ்மார்ட்போன்களில் இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டதன் பங்களிப்பு 44%. அதேசமயம், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் நமது அசெம்பிள் ஸ்மார்ட்போன்களின் பங்கு வெறும் 13% மட்டுமே.