

உலக அளவில் அவ்வப்போது வெளியிடப்படும் குறியீடுகளில் சில துறைகளில் முன்னணி நாடுகள் வரிசையில் இந்தியா இடம் பெறுவதை நாம் பார்க்கிறோம். ஆனால் முன்னிலையில் இருக்க வேண்டாம் என நினைக்கக்கூடிய ஒரு பட்டியலில் இந்தியா இடம் பிடித்திருப்பதுகவலை அளிக்கிறது. பிரபலமான `நேச்சர் (Nature)’ என்கிற அறிவியல் பத்திரிகை பிளாஸ்டிக் கழிவுகளை அதிகமாக உருவாக்கும் நாடுகள் குறித்த ஒரு பட்டியலை சமீபத்தில் வெளியிட்டது.
இதில் அமெரிக்கா, சீனா, ஐரோப்பிய யூனியனுக்கு அடுத்து இந்தியா 4-வது இடத்தில் இருக்கிறது. மற்ற நாடுகள் பிளாஸ்டிக் கழிவுகளை அதிகமாக உருவாக்கினாலும் நவீன முறைகளைப் பயன்படுத்தி அவற்றில் பெரும்பாலானவற்றை மறுசுழற்சி செய்து விடுகின்றன. இதனால் அந்த நாடுகளின் சுற்றுச்சூழல் அவ்வளவாக பாதிக்கப்படுவதில்லை. ஆனால், பிளாஸ்டிக் உமிழ்வைப் (plastic emissions) பொறுத்தவரையில் இந்தியா முன்னணியில் இருக்கிறது.