

கிரிக்கெட் உலகில், வீரர்கள் பார்மில் இருக்கிறார்கள் அல்லது பார்மில் இல்லை என்று அடிக்கடி கேள்விப்பட்டு இருக்கிறோம். பார்மில் இருக்கும் விளையாட்டு வீரரின் செயல்பாடு சிறப்பானதாக இருக்கும். இதனால், 11 பேர் அடங்கிய கிரிக்கெட் அணியின் ஒட்டுமொத்த வெற்றி வாய்ப்பும் பிரகாசமாக இருக்கும். சிறப்பாக செயல்பட முடியாமல் பார்மில் இல்லாத வீரர்கள் மீண்டும் பார்முக்கு திரும்பும் வரை அவர்களுக்கு ஓய்வு கொடுக்கப்படும்.
மொமென்ட்டம் (உந்தம்) முதலீட்டு உத்தியும் இதே தத்துவத்தைத்தான் பின்பற்றுகிறது. இது, சிறப்பாக செயல்படும் அல்லது பார்மில் உள்ள பங்குகளை தேர்ந்தெடுத்தும், பின்தங்கிய பார்மில் இல்லாத பங்குகளை குறைக்கவும் செய்கிறது.