

சராசரி முதலீட்டாளர் ஒருவர் பங்குச் சந்தையில் சரியான கருப்பொருளை (Theme) அடையாளம் காண கணிசமான அளவு நேரத்தையும், சக்தியையும் செலவிட வேண்டியிருக்கும். அவ்வாறு ஒன்றை அடையாளம் கண்டு அங்கீகரித்த பிறகு அதை எவ்வாறு மூலதனமாக்குவது என்பதை கண்டறிவது அவசியம். அதையடுத்து, ஏற்கெனவே சுழற்சியின் உச்சத்தில் மதிப்பீடுகள் இருக்கும்போது முதலீடு செய்ய இது சரியான தருணமா அல்லது மிகவும் தாமதமான உள்நுழைவா என்பதை முதலீட்டாளர்கள் முன்பாக அடுத்தடுத்த கேள்விகள் வரிசை கட்டி நிற்கும்.
போர்ட்போலியோவை உருவாக்குவதற்கான சிக்கலான மற்றும் பெரும்பாலும் சோர்வூட்டக்கூடிய செயல்முறையை கருத்தில் கொள்ளும்போது கருப்பொருள் நிதிகள் மூலம் அதாவது தீமேட்டிக் பண்ட்ஸ் மூலம் முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும். இது, சந்தை மதிப்பீடுகளை விஞ்சக்கூடிய வகையிலான பங்குகளை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட ஒரு போர்ட்போலியோவாக இருக்கும்.