

தமிழ் இலக்கியங்களில் மா, பலா, வாழை ஆகிய மூன்று கனிகளையும் சேர்த்து 'முக்கனி' எனக் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, பழங்கால தமிழர்களின் உணவுப் பழக்கவழக்கங்களிலும் பண்பாட்டிலும் இந்த மூன்று கனிகளும் முக்கிய இடம் வகிக்கின்றன. அதிலும் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பழங்களின் அரசன், தேசியப் பழம் எனப் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கி வலம் வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டு, 'மாம்பழம் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை’, 'மாம்பழங்கள் மரங்களில் அழுகி வீண்' என்பன போன்ற செய்திகளை அதிகம் பார்க்க முடிகிறது. மாம்பழத்துக்கு என்ன ஆனது? ஏன் இந்த விலை வீழ்ச்சி? இதற்கு என்னதான் தீர்வு? என்பது பற்றி பார்ப்போம்.