

கிரிப்டோ கரன்சி என்றால் என்ன? பிட்காயின் என்பது மிக அதிகமாக விலை உயர்ந்திருப்பதாக சொல்கிறார்களே! இந்தியாவில் அவற்றை வாங்க முடியுமா? அனுமதி உண்டா? முன்பு ஏதோ தடை செய்ததாக செய்திகள் வந்தனவே! இப்போதைய நிலை என்ன? என்பன போன்ற கேள்விகள், தங்கம், பங்குச்சந்தை, பரஸ்பர நிதிகள், பாண்டுகள் போன்றவற்றில் முதலீடு செய்து வரும் அனுபவம் மிக்க முதலீட்டாளர்களிடம் கூட இருக்கின்றன.
உலகின் முதல் ‘கிரிப்டோகரன்சி’ பிட்காயின். இது 2009-ல் அறிமுகமானதிலிருந்து தொடர்ந்து செய்திகளில் இருந்து வருகிறது. காரணம், அதன் அபாரமான விலை உயர்வு. 2011-ல் கிட்டத்தட்ட 6 டாலராக இருந்த ஒரு பிட்காயின் விலை, தற்போது 1.3 லட்சம் டாலர். அதாவது 17,166 மடங்கு.