

‘THE LAW OF HARVEST’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இது விவசாயத் தொழிலில் ஈடுபட்டிருப்போர் அறிந்து கொள்ள வேண்டிய விதி மட்டுமல்ல.. ஸ்டார்ட் அப் நிறுவனம் நடத்துபவர்கள், சிறு தொழில் புரிபவர்கள், இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் அனைவரும் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய விதி. அப்படி இந்த விதி என்னதான் சொல்கிறது? விவசாயிகளின் கோணத்தில் பார்க்கிறபோது, ‘நீங்கள் எதை விதைக்கிறீர்களோ, அதையே அறுவடை செய்ய இயலும்' என்பதுதான் இதன் அடிப்படை விளக்கம்.
ஆனால் இந்த விதியை அத்தோடு முடித்துக் கொண்டுவிட முடியாது. இதன் விளக்கம் இன்னும் பெரியது.. ஆழமானது.. நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய வாழ்க்கையின் அடிப்படை பாடம் இது. வெற்றி பெற விரும்பும் ஒவ்வொரு தொழில் முனைவோரும் அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய 7 உத்திகள் இந்த விதியில் உள்ளன.