

சாட்ஜிபிடியுடன் பல தலைப்புகளில் கேள்வி கேட்டு அரட்டையடிக்கும்போது எல்லாருக்கும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. ஆனால், இதுபோன்ற செயற்கை நுண்ணறிவுத் (Artificial Intelligence) தொழில்நுட்பங்கள் நாளைக்கு நம்மைப் போன்ற மனிதர்களுடைய வேலைகளையெல்லாம் பறித்துக் கொண்டுவிடும் என்று சொல்கிறார்களே. இது எந்த அளவுக்கு உண்மை?
வரலாற்றில் எந்தப் புதுத் தொழில்நுட்பம் அறிமுகமாகும்போதும் முந்தைய தலைமுறைத் தொழில்நுட்பத்தைப் பின்பற்றி வந்தவர்களுக்கு சிறு நடுக்கம் உண்டாவது இயல்புதான். ஒருவேளை, தங்களால் இந்தப் புதிய திறமையைப் புரிந்துகொள்ள முடியாதோ, தங்களுடைய பழைய திறமை இனி தேவையற்றவையாகக் கருதப்படுமோ, புதியவர்கள் தங்களைப் பின்னுக்குத் தள்ளிவிடுவார்களோ என்கிற கவலைகளெல்லாம் அவர்களுக்குள் ஏற்படும்.