

சந்தையில் ஏராளமான முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஒருவர் தனது எதிர்கால போர்ட் போலியோவை உருவாக்க பங்குகள், கடன்பத்திரம், கமாடிட்டி, ரியல் எஸ்டேட் போன்ற வற்றில் முதலீடு செய்யலாம். ஆனால், வருவாய் உருவாக்கம், வெகுமதிக்கான அபாயம், வரி விதிப்பு, வெவ்வேறு விதமான சந்தை சுழற்சிகளை வெளிப்படுத்தல் ஆகிய ஆபத்துகளை அவை உள்ளடக்கியுள்ளன. இவை வெளிப்படும்போது அந்த முதலீடுகள் ஒவ்வொன்றும் தனித்துவமான இடர்பாடுகளை கொண்ட சொத்தாக வகைப்படுத்தப்படுகின்றன. இதற்கு பொருள், அந்த அனைத்து சொத்துகளும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரியாக செயல்படாது என்பதே.
பங்குகள் ஒரு சில சமயங்களில் சிறப்பாக செயல்படும். மற்ற சொத்துகளின் செயல்திறன் குறைவாக இருக்கும். அல்லது நேர்மாறாகவும் அமையலாம். எனவே, முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு தொகுப்புகளை தேவையற்ற இடர்களில் வைக்காமல் எந்த நேரத்திலும் அனைத்து சொத்து பிரிவுகளின் பலன்களை பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இந்த வியூகம் நீண்டகால வாழ்க்கை இலக்குகளை நிறைவேற்றுவதற்கு பயனுள்ளதாக அமையும்.