

முதலீட்டில் 'சொத்து ஒதுக்கீடு' என்ற உத்தி, ஒரு காலத்தில் பங்குச் சந்தை இறக்கத்திலிருந்து பாதுகாப்பை வழங்கியது. சந்தை ஏற்றத்தில் இருக்கும்போது இதற்கு மவுசு குறைந்தது. இப்போது வரி போர், பெருநிறுவன லாபம் குறைந்து வருவது மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி குறைவு ஆகியவற்றால் மந்த நிலை ஏற்படும் என்ற அச்சத்தால் பங்குச் சந்தை சரிந்து வருகிறது.
இதனால் சொத்து ஒதுக்கீடு திட்டங்கள் மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. பல முதலீட்டாளர்கள், பங்குகள் சார்ந்த திட்டங்களில் மட்டுமே முதலீடு செய்து, அதில் கிடைத்த கவர்ச்சிகரமான குறுகிய கால வருமானத்தால் திகைத்துப் போயினர். இதனால் சொத்து ஒதுக்கீடு உள்ளிட்ட மற்ற திட்டங்களை மறந்திருந்தனர்.