

நிச்சயமற்ற தன்மை மட்டுமே நிச்சயமானது என்ற பழமொழிக்கு பங்குச் சந்தையில் எப்போதுமே தனி மவுசு உண்டு. 2020 கரோனா பெருந்தொற்று பாதிப்புக்குப் பிறகு பங்குச்சந்தையின் ஏற்றம் கவனிக்கத்தக்க வகையில் இருந்தது. இந்தியா 5 ட்ரில்லியன் டாலர் சந்தையை நான்கு ஆண்டுகளில் எட்டுவதற்கு ஸ்மால்-கேப் பங்குகளின் செயல்பாடு மிக முக்கியமானது.
அப்போது காணப்பட்ட எழுச்சி பல அனுபவமற்ற முதலீட்டாளர்களை பங்குச் சந்தையின் பக்கம் ஈர்க்க உதவியது. அந்த எழுச்சியின் மூலம் அவர்கள் அதிக லாபம் ஈட்டினர். இது, புறக்கணிக்கப்பட்ட பங்குகளை சில்லறை முதலீட்டாளர்களின் விருப்பமாக மாற்றியது. இந்த சூழ்நிலையில்தான் 2024 செப்டம்பர் பிற்பகுதியில் சந்தை பெரிய சரிவைசந்தித்து, முதலீட்டாளர்களுக்கு கிட்டத்தட்ட 1.3 ட்ரில்லியன் டாலர் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது. ஸ்மால்-கேப் பங்குகளின் விலை 50 சதவீதம் வரை சரிந்தன.