

வேலை நிமித்தமாக தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் (என்ஆர்ஐ), தாங்கள் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இந்தியாவில் உள்ள தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்புவதை ரெமிட்டன்ஸ் என சர்வதேச நிதியம் (International Monetary Fund வரையறை செய்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து உலக அளவில் புலம்பெயர்ந்தவர்களால் அனுப்பப்படும் பணத்தை பெறும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருந்து வருகிறது. உலக வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கை, இந்திய பொருளாதாரத்தில் என்ஆர்ஐ அனுப்பும் பணத்தின் பங்களிப்பை தெளிவாக எடுத்துக்காட்டி உள்ளது.