

வேலை கலாச்சார கட்டமைப்புகளை மாற்றியமைப்பதில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. உலகம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப கண்டு பிடிப்புகளால் வேலை முறை மற்றும் அதற்கான வாய்ப்புகள் எதிர்பாராத வகையில் விசாலமடைந்து வருகின்றன.
மக்கள்தொகை, உழைக்கும் இளைஞர்களை அதிகம் கொண்ட நம்மை போன்ற நாடுகளுக்கு இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் பெரிய அளவில் கைகொடுத்து உதவுகின்றன. செயலி வாயிலான பொருள் விநியோகத்தில் பகுதிநேர பணியில் ஈடுபடும் தற்காலிக ஊழியர்களுக்கு (GIG Workers) நவீன டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வரப்பிரசாதமாக மாறியுள்ளன.