

எம்எம் போர்ட்போலியோ நிர்வாக சேவை இடர் தணிப்பு, பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வருவாய், சொத்து ஒதுக்கீடு மற்றும் பன்முகப்படுத்தல் ஆகியவை முதலீட்டுக்கான அடிப்படைகளில் முதன்மையானவையாகும். இவற்றை ஒருவர் கடைபிடிக்கும் பட்சத்தில் அவருக்கு முதலீட்டு அனுபவம் என்பது மகிழ்ச்சியானதாகவும், மன அழுத்தமில்லாமலும் இருக்கும். மனம் மகிழ்சியாக இருக்கும்போது சிந்தனை தெளிவாகி அவரின், இலக்கு மற்றும் சாதனை எளிதாகி விடும்.
மேலும் இந்த அடிப்படை கொள்கைகள், சந்தை சுழற்சி எதுவானாலும், சந்தையில் நிச்சயமற்ற நிலை எதுவாக இருந்தாலும் நன்றாக சமாளிக்கும் தாரக மந்திரமாக இருக்கும். சொத்து ஒதுக்கீடு (அசெட் அலோகேஷன்) என்பது அனைத்து வகையான அத்தியாவசிய முதலீட்டு கொள்கைகளையும் உள்ளடக்கியது. நிரூபிக்கப்பட்ட சாதனையுடன் கூடிய நீண்டகாலமாக நடப்பில் உள்ள வெற்றிகர திட்டமாகும்.