

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற உடனேயே, சில நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டார். உள்நாட்டு மற்றும் பன்னாட்டு நோக்குடைய சீர்திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் அமெரிக்காவை மீண்டும் சிறந்த அமெரிக்காவாக (Make America Great Again: MAGA) மாற்றுவதே அவரது நோக்கம் என்பதை அவை தெளிவாகக் குறிப்பிட்டன.
உலகமயமாக்கல் என்ற யோசனையை ட்ரம்ப் விரும்பியதில்லை. அமெரிக்கா முதன்மையான நாடாக இருக்க வேண்டும் என்பதுதான் அவரது லட்சியம். 1980-களில் இருந்து சீனாவில் நிறுவப்பட்ட அமெரிக்க நிறுவனங்களை திரும்பப் பெறுவது மற்றொரு நோக்கமாகும். குறிப்பாக, வெளிநாடுகளில் அமெரிக்க நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பொருட்கள் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன.