

பொதுவாக மத்திய பட்ஜெட் என்றாலே, திருவிழா போல் பார்க்கப்பட்ட காலம் ஒன்று உண்டு. எந்த பொருட்களின் விலை உயரும், எதன் விலை குறையும், பொதுமக்களுக்கு சலுகைகள் வழங்கப்படுமா அல்லது சுமை அதிகரிக்குமா என்ற பல்வேறு கேள்விகளுடன் எதிர்நோக்கப்படும். ஆனால், தற்போது ஜிஎஸ்டி கவுன்சில் மூலம் வரி உயர்வு அல்லது குறைப்பு செய்யப்படுவதால் பட்ஜெட்டுக்கு அந்த வேலை இல்லாமல் போய்விட்டது.
பட்ஜெட் என்பது வரவு செலவு கணக்கு காட்டும் ஒரு நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அரசு வருவாயின் முக்கிய ஆதாரமான மறைமுக வரிக்கு (ஜிஎஸ்டி) பட்ஜெட்டில் எந்த வேலையும் இல்லாத நிலையில், நேரடி வரி (வருமான வரி) பற்றிய எதிர்பார்ப்பு மையமாக இருக்கிறது. நேரடி வரிக்கு தனிமனித பொருளாதாரத்தோடு நேரடி தொடர்பு உள்ளது.