

தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) தயாரிப்புகளை (Product) உருவாக்குவதில் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கோலோச்சி வருகின்றன. அதேநேரம், இத்தகைய முன்னணி நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் சுந்தர்பிச்சை, சத்ய நாதெள்ளா, அர்விந்த் கிருஷ்ணா, சாந்தனு நாராயண் உள்ளிட்ட இந்தியர்கள் உள்ளனர்.
சில இந்திய ஐ.டி. நிறுவனங்கள் உலக அளவில் பிரபலமாக இருந்தாலும் அவை சேவைத் துறையில்தான் முத்திரை பதித்து வருகின்றன. நம் நாட்டு நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட தேடுபொறி, செயலி உள்ளிட்ட முக்கிய தயாரிப்புகள் உலக அளவில் பிரபலமாக இல்லை. இதில் விதிவிலக்காக, வங்கித் துறையில் பணப்பரிவர்த்தனைக்காக இந்தியா உருவாக்கிய UPI பிரபலமடைந்து வருகிறது. இன்றைக்கு உலகின் பல நாடுகளில் இது பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.