இந்த ஆண்டில் சராசரி ஊதிய உயர்வு 9.4% ஆக இருக்கும்

இந்த ஆண்டில் சராசரி ஊதிய உயர்வு 9.4% ஆக இருக்கும்
Updated on
1 min read

ஆண்டு பிறந்துவிட்டாலே ஊதிய உயர்வு எப்படி இருக்கும் என்பதுதான் சம்பளதாரர்கள் அதிகம் விவாதிக்கும் விஷயமாக இருக்கும். இன்றைய இந்தியாவின் வேகமான வளர்ச்சி கட்டமைப்பை உருவாக்குவதில் திறமையான இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக உள்ளது. அதனால்தான் தொழில் துறையில் அவர்களுக்கான தேவையும் அதிகமாக உள்ளது. பொதுவாக திறமையான ஊழியர்களை எந்த நிறுவனமும் இழக்க விரும்புவதில்லை. அவர்கள் கேட்கும் சம்பளத்தை தர தயாராகவே இருக்கின்றனர். இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து வருவதால் செலவுகளை சமாளிக்க அவர்கள் ஊதிய உயர்வை எதிர்பார்க்கிறார்கள்.

மனிதவள ஆலோசனை நிறுவனமான மெர்சரின், தொழில்நுட்பம், உயிர் அறிவியல், நுகர்வோர் பொருட்கள், நிதி சேவைகள், உற்பத்தி, வாகனம், பொறியியல் உள்ளிட்ட துறைகளை உள்ளடக்கிய 1,550-க்கும் மேற்பட்ட நிறுவனங்களிடம் ஆய்வு நடத்தியது. அதன் அடிப்படையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஊதிய உயர்வு என்பது சராசரியாக 8 சதவீதமாக இருந்து வந்துள்ளது. ஆனால், இந்த ஆண்டு மாத சம்பளதாரர்களுக்கான சராசரி ஊதிய உயர்வு 9.4 சதவீதமாக இருக்கும் என்பது இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, பணியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மின்சார வாகனங்களின் எழுச்சி மற்றும் மத்திய அரசின் "மேக் இன் இந்தியா" திட்டங்களின் முயற்சியால் வாகனத் துறையில் பணியாற்றும் பணியாளர்களுக்கான ஊதிய உயர்வு 8.8 சதவீதத்தில் இருந்து 10 சதவீதம் அதிகரிக்கும் என்ற கணிப்புடன் அத்துறை முதலிடத்தில் உள்ளது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in