

வாடகை வருமானம் தற்போது நடப்பில் இருக்கிற வருமான வரி சட்டத்தின்படி, ஒன்றுக்கு மேற்பட்ட சொந்த வீடுகள் தன் பேரில் வைத்திருப்பவர், அவற்றில் ஒரு வீட்டை குடியிருக்கும் வீடாக காட்டலாம். அதற்கு வருமான வரி இல்லை. ஆனால், சொந்தப் புழக்கத்திற்காக வைத்திருந்தாலும், இரண்டாவது மற்றும் அதற்கு மேல் இருக்கும் வீடுகளுக்கு அப்படிப்பட்ட சலுகையை பெற முடியாது.
வாடகைக்கு விட்டிருந்தால் வாடகை வருமானத்தை கணக்கில் காட்டி வரி கட்ட வேண்டும். வாடகைக்கு விடாவிட்டாலும், சந்தை வாடகை அளவு வருமானம் வந்தது போல (Deemed rent) வருமான வரி கட்ட வேண்டும். வரும் 2025- 26 க்கான பட்ஜெட்டில் இதில் மாறுதல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 2025-26 முதல், வாடகைக்கு விடாத அவர் பெயரில் இருக்கும் இரண்டாவது வீட்டுக்கு வருமான வரி கட்டத் தேவையில்லை.