

மக்கள் தொகையும் தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மின்சாரத்துக்கான தேவையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மின் தேவையை பூர்த்தி செய்வதில் சூரிய ஒளி, காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி திட்டங்கள் உதவுகின்றன. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாதது உள்ளிட்ட பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளதால் இத்தகைய திட்டங்கள் மனிதர்களுக்கு இயற்கை அளித்த வரமாகவே கருதப்படுகின்றன. இதை உணர்ந்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இதுகுறித்து தமிழ்நாடு சூரிய ஒளி மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் (டான்ஸ்பா) பொருளாளர் சாஸ்தா எம்.ராஜா அளித்த பேட்டியிலிருந்து..