

உலகின் மிகப்பெரிய பரப்பளவு, சக்தி வாய்ந்த ராணுவம், அதீத நுகர்வு சக்தி, பெரும் பொருளாதாரம், உலகளாவிய வர்த்தகம் என பலவற்றிலும் முதலிடத்தில் இருக்கிற யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவின் (USA) உச்சபட்ச அதிகார பீடமான, அதிபர் பதவிக்கு நடந்த தேர்தலில் தெளிவான வெற்றி பெற்று, 78 வயதாகும் டொனால்டு ட்ரம்ப், 47-வது அதிபராகி உள்ளார். தேர்தலின்போது ட்ரம்ப் கொடுத்த, வாக்குறுதிகள் அமெரிக்காவின் எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல, உலக நாடுகளையும் அதிர, அச்சப்பட வைத்தன.
ட்ரம்ப் தனது பதவி காலத்துக்குள் உலக அமைதியில், தேசங்களுக்கு இடையிலான அரசியலில், பங்குகள், கரன்சி, பாண்டுகள் மற்றும் கமாடிட்டி சந்தைகளில், தேசங்களின் பொருளாதாரங்களில், பூமிப்பந்தின் சுற்றுச்சூழலில் என பலவற்றிலும் மிகப்பெரும் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடும் என்பது போல அவரது நடவடிக்கைகள் அமைந்துள்ளன.