

அடுத்த இரண்டு மாதத்தில் நடப்பு நிதி ஆண்டு (2024-25) முடிவுக்கு வர இருக்கிறது. இந்த சமயத்தில் பங்குச் சந்தையில் நேரடியாகவோ மறைமுகமாகவோ முதலீடு செய்துள்ளவர்கள் சில முக்கிய முடிவுகளை எடுத்து அவற்றை சரிவர நிறைவேற்றுவது அவர்களுக்கு நல்லது. பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ளவர்கள் அவர்களின் நீண்டகால மூலதன ஆதாயத்தையும், குறுகிய கால மூலதன ஆதாயத்தையும் கணக்கிட்டு எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்று நிர்ணயித்துக் கொள்வது அவசியம்.
இதைத்தவிர கம்பெனிகள் வழங்கிய டிவிடெண்டுகள் முழுவதும் வருமான வரிக்கு உட்பட்டதே. அதையும் மொத்த வருமானத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். கம்பெனிகள் ரூ.5,000-க்கு மேல் வழங்கும் டிவிடெண்ட்களுக்கு குறிப்பிட்ட அளவில் வரி பிடித்தம் செய்திருப்பார்கள். அதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.