

லூய்ஜி நிக்கோலஸ் மாஞ்சியோனே (Luigi Mangione) 26 வயது இளைஞர். இத்தாலிய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவருடைய தாத்தா இத்தாலியிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர். அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொறியியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர். 2023-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் ட்ரூ கார் நிறுவனத்தில் வேலை பார்த்தவர். செயற்கை நுண்ணறிவு துறையில் மிகவும் நாட்டம் கொண்டவர். இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட இவர், டிசம்பர் 9-ம் தேதி அல்டூனாவில் இயங்கி வரும் மெக்டொனால்ட் உணவகத்தில் கைது செய்யப்பட்டார்.
கைதுக்கான காரணம் என்ன? - அமெரிக்காவின் யுனைடெட் ஹெல்த்கேர் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (CEO) பிரையன் தாம்ஸன் நியூயார்க் நகரில் டிசம்பர் 4-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்ச வழக்கில்தான் லூய்ஜியை போலீஸார் கைது செய்தனர். இவர் மீது 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது. லூயிஜ் ஏன் கொலை செய்தார் என்பது குறித்த ஒரு காணொலியும் சமூக ஊடகங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.