

இந்திய கிராமங்களின் சூழல் தற்போது வேகமாக மாறி வருகிறது. இனி இந்திய கிராமங்கள் விவசாயம் சார்ந்த பொருளாதாரம் மட்டுமானதாக இருக்காது. உற்பத்தி, கட்டுமானம், வர்த்தகம் என பல்வேறு துறைகளில் நமது கிராமங்கள் வளர்ச்சி காண தொடங்கியுள்ளன.
இன்று 99% கிராமங்கள் சாலை, பாலம், மின்சாரம் என பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளுடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளன. நகரங்களைப் போலவே கிராமங்களிலும் செல்போன் பயன்பாடு உச்சத்தில் உள்ளது. கல்வி, மருத்துவ வசதிகள் மேம்பட்டு வருகின்றன. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் அதிகரித்து வருகிறது. சராசரி தனிநபர் வருமானம் கிராமங்களில் 2,000 டாலரை (ரூ.1.70 லட்சம்) தாண்டியுள்ளது. இதனால் கிராமப்புறங்களில் நுகர்வு நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.