

‘நித்திய கண்டம் பூரண ஆயுசு’ இந்த பழமொழி, பொதுவாக மனித வாழ்க்கையில் எப்போதும் சிரமங்கள் இருந்தாலும், அதை எல்லாம் தாண்டி நீண்டகாலம் வாழ்வதை குறிப்பது ஆகும். இந்த பழமொழி 2024-ம் ஆண்டின் பங்குச் சந்தை நகர்வுக்கு நன்கு பொருந்தும். இந்திய பங்குச் சந்தைகள் 2024-ல் பல்வேறு சிரமங்களை சந்தித்திருந்தாலும், அவற்றை எல்லாம் தாக்குப்பிடித்து இன்னமும் வலிமை காட்டி வருகிறது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி ஜனவரி 2024 தொடக்கத்தில் 21,700 ஆக இருந்தது. செப்டம்பர் மாதம் வரை வலிமை காட்டி 26,277 என்ற உச்ச புள்ளியை தொட்டது. இதன் மூலம் 21% ஏற்றம் கண்டது. ஆனால் அடுத்தடுத்த மாதங்களில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குகளை தொடர்ந்து விற்றதால் இறக்கம் கண்டது.