

பங்குச் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட், கடன் பத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு முதலீட்டு வகைகள் உள்ளன. இதில் தங்கம் மிகவும் பாதுகாப்பானதாகவும் லாபகரமானதாகவும் கருதப்படுகிறது. தனிநபர்கள் மட்டுமல்லாது உலக நாடுகளின் மத்திய வங்கிகள் கூட தங்கத்தை கணிசமாக வாங்கிக் குவித்து வருகின்றன.
தங்கத்தின் விலை நீண்டகால அடிப்படையில் சராசரியாக 8 முதல் 10 சதவீத உயர்வை சந்தித்து வருகிறது. ஆனால் உலக நாடுகளிடையே ஏற்படும் போர் பதற்றம், பங்குச்சந்தைகளில் ஏற்படும் கடும் சரிவு, பொருளாதார தேக்க நிலை உள்ளிட்டவை ஏற்படும்போது முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரிக்கும். அந்த குறிப்பிட்ட ஆண்டில் தங்கம் விலை வழக்கத்தைவிட அதிக உயர்வை எட்டுவது வழக்கம்.