

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பங்குச் சந்தைகள் சராசரியாக (சிஏஜிஆர்) 11 சதவீத வளர்ச்சியை கொடுத்துள்ளன. ஆனால், தற்போதைய உலக சூழல் மிகவும் சிக்கல் நிறைந்ததாக காணப்படுகிறது. புவிசார் அரசியல் பதற்றம், உயர் மதிப்பீடு, அந்நிய முதலீட்டாளர்கள் வெளியேற்றம் மற்றும் மெதுவான வருவாய் வளர்ச்சி ஆகியவை பங்குச் சந்தையில் நிச்சமயற்ற தன்மையை அதிகரிக்க செய்துள்ளன.
இதனால், பல போர்ட்போலியோக்கள் இப்போது அதிக வருவாய், அதிக ரிஸ்க் என்ற பாதையை நோக்கி சாய்ந்துள்ளன. குறிப்பாக, நடுத்தர மற்றும் சிறு நிறுவன பங்குகள் சமநிலையான ரிஸ்க் மேலாண்மையிலிருந்து தற்போது விலகிச் சென்றுள்ளன. அதிக வருவாய் தரும் காலகட்டங்கள் பெரும்பாலும் முதலீட்டாளர்களிடையே தவறான பாதுகாப்பு உணர்வை உருவாக்கி விடுகின்றன. இதனால், தாங்கள் எதிர்கொள்ளும் சாத்தியமான அபாயங்கள் குறித்து அவர்கள் கவனிக்காமல் விட்டுவிடுகின்றனர்.
இதற்கு எடுத்துக்காட்டு, நிஃப்டி மிட்கேப் 150 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 250 போன்ற மிட் மற்றும் ஸ்மால் கேப் குறியீடுகள் சமீபத்திய ஆண்டுகளில் 22 முதல் 29 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. அதேநேரம், இந்தப் பிரிவுகள் கடுமையான சரிவை சந்திக்கவும் வாய்ப்பு அதிகம். கடந்த 2020-ம் ஆண்டில் நிஃப்டி 50-ன் சரிவு 34 சதவீதமாக இருந்த நிலையில், நிஃப்டி ஸ்மால்கேப் 250-ன் சரிவு 40 சதவீதமாக காணப்பட்டது. இது உயர் வளர்ச்சி துறைகளில் உள்ள ஏற்ற இறக்கங்களை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
நிலையற்ற தன்மை அல்லது மாறுபாடு என்பது பெரும்பாலும் உண்மையான ஆபத்துகளை நம் கண்ணிலிருந்து மறைத்துவிடலாம். அதேபோல தீவிர சந்தை மாற்றங்கள் முதலீட்டாளர்களின் நீண்டகால இலக்குகளுக்கு இடையூறு விளைவிக்கலாம். சந்தை ஓட்டம் கணிக்க முடியாதவை என்பதால், பல முதலீட்டாளர்கள் ஸ்திரத்தன்மையை நாடுகின்றனர்.
அதனால்தான் அவர்களின் கவனம் நிஃப்டி 100, சென்செக்ஸ் 30 குறிீடுகளின் பக்கமே நிற்கிறது. யூரோ ஒன்றிய நெருக்கடி, கோவிட் போன்ற பல்வேறு மோசமான நிகழ்வுகளின்போது கூட அவை நிலைத்து நின்று ஆதாயத்தை பதிவு செய்தன. இந்த அணுகுமுறை முதலீட்டாளர்கள் சந்தை நிலைமைகளை பொருட்படுத்தாமல் அவர்களின் நம்பிக்கையை பேணவும், இலக்குகளோடு இணைந்திருப்பதையும் சாத்தியமாக்குகிறது.
குறைந்தபட்ச மாறுபாடு மற்றும் ஸ்திரத்தன்மையை மையமாகக் கொண்ட உத்தியில், முதலீடு செய்வது நிலையான வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கிறது. அதன்படி, லார்ஜ் கேப் பங்குகளில் கவனம் செலுத்துவதன் மூலம் சந்தை ஏற்றத்தாழ்வுகளை பற்றி கவலைப்படாமல் முதலீட்டாளர்கள் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைய முடியும்.
இப்படியான சுமுகமான முதலீட்டு பயணத்தை விரும்பும் முதலீட்டாளர்களுக்கு, ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் சமீபத்தில் புருடென்ஷியல் ஈக்விட்டி மினிமம் வேரியன்ஸ் ஃபண்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நவம்பர் 18-ம் தேதி அமலுக்கு வந்துள்ள இந்த திட்டம் 2024 டிசம்பர் 2 வரை நடைமுறையில் இருக்கும்.
இந்த பண்ட் நல்ல நிர்வாகம் மற்றும் வலுவான பணப்புழக்கத்தை கொண்ட லார்ஜ்-கேப் நிறுவனங்களை இலக்காக வைத்து செயல்படுத்தப்படுகிறது. எனவே, சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு இடையே நீண்டகால வளர்ச்சி மற்றும் பின்னடைவுக்கு ஒரு சமநிலையான அணுகுமுறையை வழங்குகிறது. மேலும், ஆழமான பகுப்பாய்வை பயன்படுத்தி ஏற்ற இறக்கத்தை குறைக்கும் வகையில் லார்ஜ்-கேப் பங்குகளில் பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை இந்த திட்டம் கட்டமைக்கிறது.
- இ.செல்வநாயகம், இயக்குநர், மெர்க்ஸ் கேபிடல் பிரைவேட் லிமிடெட்