

முதலீடு செய்யும் ஒவ்வொருவரும் விரும்புவது எந்த பதற்றமுமின்றி, அதிக ஏற்ற இறக்கம் இல்லாமல் நிலையான நல்ல வருமானத்தை ஈட்ட வேண்டும் என்பதே. அமைதியான முதலீட்டு அனுபவமே வெற்றிகரமான முதலீட்டாளராக சிறந்து விளங்குவதற்கு அடிப்படை. வெவ்வேறு பிரிவுகளில் முதலீடு செய்வதில் குறிப்பிடத்தக்க இடர்கள் இருந்தாலும், மூலோபாய அடிப்படையிலான முதலீடு மற்றும் சில அடிப்படை முதலீட்டு விதிகளை கடைபிடிக்கும்போது நாம் செய்யும் முதலீடானது விரும்பிய பலனைத் தரும்.
ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் என புவிசார் அரசியல் பதற்றங்களால் திடீரென சந்தைகள் சரிவதும், பின்பு எழுவதும் அன்றாட நிகழ்வாக மாறி வருகிறது. முக்கியமாக, பங்குச் சந்தையில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பிரிவுகள் செயல்பாடுகள் கணிக்க முடியாத நிலையில் உள்ளன.
இதனால், முதலீட்டாளர்கள் லாபம் அடைவாரா அல்லது நஷ்டம் அடைவாரா என்பதை யாரும் நிச்சயமாக சொல்லிவிட முடியாது. தற்போதைய உலக நிலவரங்களைப் பார்க்கும்போது சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கம் என்பது குறுகிய காலம் முதல் இடைக்காலம் வரை நீடிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், மூலோபாயம் முதலீட்டு பாணியை நாம் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இது, வளர்ச்சி சார்ந்ததாக இருப்பதுடன் குறைந்தபட்ச ஏற்ற இறக்கங்களுடன் நமது முதலீட்டை அதிக மாறுபாடு இல்லாமல் பாதுகாக்கிறது. அதேநேரம், முதலீட்டாளர்களின் மனமும் பதற்றமின்றி அமைதியாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பண்டுகள் விற்பனை அதிகமாக இருந்தன.
ஆனால், சந்தையில் சமீபத்திய திருத்தங்கள் முதலீட்டாளர்கள் இன்னும் அதிகமான பங்குகளை வாங்கி சராசரி செய்யக் கூடிய நிலைக்கு தள்ளியுள்ளது. ஒரு சில சமயங்களில் அது ஏமாற்றம் அளிக்கக் கூடியதாகவும், எதிர்காலத்தில் எதிர்பார்த்த வருமானத்தை அளிக்க முடியாமலும் போகலாம்.
எனவே, முதலீட்டாளர்கள் மதிப்புகள் நியாயமானதாகவும், மாறுபாடுகள் குறைவாகவும் இருக்கும் முதலீட்டு தேர்வை தேடுவது அவசியமாகி உள்ளது. அதற்கான விடைதான் லார்ஜ் கேப் பண்டுகள். நிப்டி 50 குறியீட்டில் இடம்பெற்றுள்ளதால் இதற்கு அதிக விளக்கம் தேவையில்லை. குறைந்தபட்ச ஏற்ற இறக்கம், உயர் நிர்வாகம், ஏராளமான பணப்புழக்கம், நியாயமான தற்போதைய மதிப்பீடுகள் ஆகியவை நிப்டி 50 நிறுவனங்களின் முதலீட்டை கவர்ச்சிகரமானதாக மாற்றுகின்றன.
இந்த சூழலில்தான், முதலீட்டாளர்களின் தேவையை உணர்ந்து ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் பண்ட் நிறுவனம், ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஈக்விட்டி மினிமம் வேரியன்ஸ் பண்ட் திட்டத்தை உருவாக்கியுள்ளது. இன்று (நவம்பர் 18) அறிமுகம் செய்யப்படும் இந்த திட்டம் வரும் டிசம்பர் 2 வரை அமலில் இருக்கும். நீண்டகால மூலதன வளர்ச்சி மற்றும் பங்குச் சந்தையில் காணப்படும் ஏற்ற இறக்கத்தின் தாக்கத்தை குறைத்து, அதிக வருவாய் ஈட்ட விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இந்த திட்டம் நல்ல லாபகரமானதாக இருக்கும். - என். விஜயகுமார்; நிர்வாக இயக்குனர்; கிளிக்4எம்எஃப் பிரைவேட் லிமிடெட்