சந்தை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ற முதலீட்டு திட்டம்

சந்தை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ற முதலீட்டு திட்டம்
Updated on
2 min read

குறள் இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் முதலீடு செய்வதில் ரவி எப்போதுமே எச்சரிக்கையானவர். அதிக வருவாய் கிடைக்குமா அல்லது முதலுக்கே மோசமாகுமா என்பதை ஒன்றுக்கு நூறு முறை ஆராய்ந்து ஒவ்வொரு திட்டத்திலும் முதலீடு செய்பவர். இதனால், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத ரவியின் முதலீட்டு சாய்ஸ் பெரும்பாலும் நிலையான வைப்பு மற்றும் கடன்பத்திர திட்டங்களாக மட்டுமே இருந்தன.

ஆனால், சமீப காலமாக ரவியின் முதலீட்டு வருமானம் பணவீக்கத்தை விஞ்சி லாபம் தரவில்லை. இதனால், தனது முதலீட்டு பாணியை மாற்றியமைக்க முடிவு செய்தார். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக காசு பார்க்கலாம் என பலர் கூறியதையடுத்து ரவியின் கவனம் அதன் பக்கம் திரும்பியது. ஆனால் சந்தையின் செயல்பாடுகள் எப்போதுமே ஒரே மாதிரியாக இருந்ததில்லை. அது இசிஜி போல மேலும் கீழும் போகக்கூடியவை. எப்போதும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழக்க விரும்பாத ரவி, நிதி ஆலோசகரின் உதவியை நாடினார்.

அப்போது பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்ட் திட்டம் பற்றி அவருக்கு தெரியவந்தது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பங்கு மற்றும் கடன் பத்திரங்களில் முதலீட்டை சரி செய்வதன் மூலம் நல்ல வருவாய் ஈட்டலாம் என்றார் ஆலோசகர். மேலும், மன அமைதிக்கு உறுதியளிக்கும் திட்டங்களை அவர் பரிந்துரைத்ததால் ரவி கவலையின்றி முதலீடு செய்ய தயாரானார்.

பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்ட் என்றால் என்ன? - பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்ட் என்பது ஒரு வகையான கலப்பு பரஸ்பர நிதி திட்டமாகும். இதில், சந்தை நிலவரங்களை பொறுத்து பங்குகள் மற்றும் கடன் பத்திர முதலீட்டின் அளவு இறுதி செய்யப்படுகிறது. ‘குறைவான விலையில் வாங்கு, அதிகமான விலைக்கு விற்பனை செய்’ என்ற தாரக மந்திரத்தை இந்த பண்ட் மேலாளர்கள் பின்பற்றி வருகின்றனர். முதலீட்டாளர்களின் இடர்பாட்டை நிர்வகிக்கும் போது நிலையற்ற சந்தைகளில் முதலீடு செய்ய இந்த திட்டம் அனுமதிக்கிறது. பண்ட் மேனேஜர்கள் இதற்காக தங்களது தனி வியூகங்களின் மாடல்களை பயன்படுத்துகின்றனர். அதாவது எப்போது பங்குகளில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும் அல்லது குறைக்க வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்கின்றனர்.

கருத்தில் கொள்ள வேண்டிய நன்மைகள்: பெரும்பாலான முதலீட்டாளர்கள் உணர்ச்சிவயப்பட்டு சந்தை உச்சத்தில் இருக்கும்போது பங்குகளை வாங்குவதும், சரியும்போது விற்பதும் வழக்கம். இதற்கு முதலீட்டாளர்களின் பேராசை மற்றும் பய உணர்ச்சி முக்கிய காரணமாக அமைந்துவிடுகின்றன. இதுபோன்ற உணர்ச்சிவயப்பட்ட நடவடிக்கைகளை தடுப்பதற்கு பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்ட் பயன்படுகிறது. இது முதலீட்டுக்கான ஒதுக்கீடுகளை மாற்றியமைப்பதன் மூலம் முதலீட்டு பயணத்தை மென்மையாக்குவதையும், காலப்போக்கில் அதிக நிலையான வருமானத்தை உறுதி செய்வதையும் முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.

முதலீடு செய்ய ஆசையா? - சந்தை ஏற்ற இறக்கங்களில் எச்சரிக்கையாக பயணிக்க விரும்பும், மிதமானது முதல் அதிகமான வளர்ச்சியை எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கு இந்த திட்டம் மிகவும் பொருத்தமாக இருக்கும். பங்குகளை அதிகம் விரும்பும் அதேநேரத்தில் அதிகபட்ச ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம். தங்களிடம் உள்ள செல்வத்தை வளர்த்துக் கொண்டே மூலதனத்தை பாதுகாக்க விரும்பும் ஓய்வுபெற்றவர்களுக்கும் இந்த திட்டம் ஒரு நல்ல தேர்வாக அமையும்.

யூகத்தை விலக்கி உங்கள் முதலீட்டை சந்தைப் போக்குகளுடன் சீரமைக்கக்கூடிய இந்த நிதி யோசனை பிடித்திருக்கும்பட்சத்தில் ஐசிஐசிஐ ப்ரூடென்ஷியல் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் பண்டை முதலீட்டாளர்கள் தாராளமாக தேர்வு செய்யலாம். இந்த பண்டில், ரூ.60,000 கோடிக்கும் அதிகமான தொகை நிர்வகிக்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய மற்றும் பழமையான இந்த நிதி திட்டம் செப்டம்பர் 30, 2024 நிலவரப்படி கடந்த ஓராண்டில் 23.59 சதவீத வருவாயை அளித்துள்ளது. மூன்று ஆண்டு சராசரி ஆண்டு வருவாய் (சிஏஜிஆர்) 13.75 சதவீதமாகவும், ஐந்தாண்டு சிஏஜிஆர் 14.37 சதவீதமாகவும் உள்ளன.

- ராஜேஷ்; குறள் இன்வெஸ்ட்மென்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in