சிறந்த ‘தலைவர்’ யார்? - ரத்தன் டாட்டா உதிர்த்த 10 உத்வேக மேற்கோள்கள்

சிறந்த ‘தலைவர்’ யார்? - ரத்தன் டாட்டா உதிர்த்த 10 உத்வேக மேற்கோள்கள்
Updated on
1 min read

வயது மூப்பு - உடல்நலக்குறைவு காரணமாக, இந்தியாவின் மகத்தான தொழிலதிபர் ரத்தன் டாடா தனது 86 வயதில் மறைந்தார். இந்திய தொழில் துறையில் அவரது பங்களிப்பு மிகப் பெரியது. குறிப்பாக, சமூக நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அவரது தொழில் அணுகுமுறை என்றென்றும் முன்னுதாரணமாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. அத்தகைய மதிப்பு மிக்கவர் உதிர்த்தவற்றில் 10 முக்கிய மேற்கோள்கள் இங்கே...

  • “அதிகாரமும், செல்வமும் எனது முக்கியப் பங்குகளாக இருந்ததே இல்லை!”
  • “நீங்கள் வேகமாக நடக்க விரும்பினால் தனியாக நடப்பீர்; ஆனால் நீண்ட தூரம் நடக்க விரும்பினால் இணைந்து நடக்க வேண்டும்.”
  • “உங்கள் மீது வீசப்பட்ட கற்களைக் கொண்டு ஒரு நினைவுச் சின்னத்தை கட்டி எழுப்புங்கள்.”
  • “வெற்றியாளர்கள் என்னை ஈர்ப்பார்கள். ஆனால், அவர்கள் வெற்றிக்கான பாதை இரக்கமற்றதாக இருந்தால் நான் அவர்களைக் கண்டுகொள்வதில்லை.”

“வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் முக்கியம். அவைதான் நம்மை முன்னே நகர்த்திச் செல்லும். இசிஜி-யில் கோடுகள் நேராக இருந்தால் நாம் உயிருடன் இல்லை என்று அர்த்தம்.”

  • “வாழ்வில் பொருள் சார்ந்த விஷயங்கள் முக்கியமே அல்ல. உங்களை நேசிப்பவர்களின் நலன்தான் முக்கியம். என்றாவது ஒருநாள் அதை நீங்கள் உணர்வீர்கள்.”
  • “வேலை - வாழ்க்கை சமநிலையில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் வேலை - வாழ்க்கை ஒருங்கிணைப்பில் நம்பிக்கை கொண்டுள்ளேன். உங்கள் வேலையையும் வாழ்க்கையையும் அர்த்தமுள்ளதாக ஆக்குங்கள்.”
  • “தங்களைவிட திறமையான உதவியாளர்கள், பணியாளர்கள் உடன் இருப்பதை உறுதி செய்பவர்கள்தான் சிறந்த தலைவராக இருக்க முடியும்.”
  • “சவால்களை எதிர்கொள்வதில் விடாமுயற்சியுடனும், நெகிழ்ச்சியுடனும் இருங்கள், ஏனென்றால் அவைதான் வெற்றியின் கட்டுமானத் தொகுதிகள்.”
  • “மற்றவர்களுடனான உங்கள் தொடர்பில் கருணை, பச்சாத்தாபம் மற்றும் இரக்கத்தின் சக்தியை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.”

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in