

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) பங்களிப்பு மிக முக்கியமானது. மத்திய அரசின் உதயம் தளத்தின்படி, நாடு முழுவதும் 2.28 கோடி எம்எஸ்எம்இ நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெண்களால் நடத்தப்படும் நிறுவனங்களின் எண்ணிக்கை 46.67 லட்சம் ஆகும். நாட்டின் மொத்த எம்எஸ்எம்இ நிறுவனங்களில் இது 20.5 சதவீதம் ஆகும்.
எம்எஸ்எம்இ நடத்தும் பெண்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், கர்நாடகா, குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன. இந்தியாவில் பெண்களால் நடத்தப்படும் எம்எஸ்எம்இ நிறுவனங்களில் 50 சதவீதம் இந்த 5 மாநிலங்களில் உள்ளன.