இந்தியாவின் இளம் கோடீஸ்வரர்

பியர்ல் கபூர்
பியர்ல் கபூர்
Updated on
1 min read

இந்தியாவில் முகேஷ் அம்பானி, கவுதம் அதானி உட்பட நூற்றுக்கணக்கானோர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். இப்போது இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருவதால் பல இளம் தொழில்முனைவோர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் 27 வயதில் இப்பட்டியலில் இடம்பிடித்து நாட்டின் இளம் கோடீஸ்வரர் என்ற சாதனையை படைத்துள்ளார் பியர்ல் கபூர்.

பியர்ல் கபூர் தொடங்கிய ஜைபர் 365 என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் அபார வளர்ச்சியால் இது சாத்தியமானது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், வெப்3 மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான ஆபரேட்டிங் சிஸ்டம் (ஓஎஸ்) மென்பொருளை வழங்குகிறது.

இது இணையதள குற்றங்களில் இருந்து பாதுகாப்பை வழங்குவதுடன் தகவல் பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளிக்கிறது. இந்நிறுவனம் தொடங்கப்பட்ட 3 மாதங்களிலேயே யூனிகார்ன் அந்தஸ்தைப் பெற்றது. 1 பில்லியன் டாலர் (ரூ.8,300 கோடி) மதிப்பை தாண்டும் நிறுவனம் யூனிகார்ன் என்ற அந்தஸ்தைப் பெறுகிறது.

லண்டனை தலைமையகமாகக் கொண்ட இந்த நிறுவனம், குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ.9,840 கோடி ஆகும். இதில் நிறுவனரான பியர்ல் கபூருக்கு 90% பங்குகள் உள்ளன.

இதன் மதிப்பு ரூ.9,129 கோடி ஆகும். லண்டனில் உள்ள குயின் மேரி பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி (முதலீட்டு வங்கி) பட்டம் பெற்றுள்ள கபூர், வெப்3 தொழில்நுட்ப உலகில் சிறந்த புதுமையாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஏஎம்பிஎம் ஸ்டோர் நிறுவனத்தில் நிதி ஆலோசகராக தனது பணியை தொடங்கினார் கபூர்.

மேலும் பிளாக்செயின் ஆலோசனை வழங்கும் ஆன்டீர் சொலூஷன்ஸ் நிறுவனத்தில் வர்த்தக ஆலோசகராகவும் பணியாற்றினார். அதன் பிறகு கடந்த 2022-ம் ஆண்டு பில்லியன் பே டெக்னாலஜிஸ் நிறுவனத்தை தொடங்கினார். அதன் பிறகுதான் ஜைபர் 365 நிறுவனத்தைத் தொடங்கினார். குறுகிய காலத்தில் 1 பில்லியன் டாலர் கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in