மத்திய அரசின் 10 முக்கிய திட்டங்கள்

மத்திய அரசின் 10 முக்கிய திட்டங்கள்
Updated on
2 min read

மத்தியில் கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 10 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இந்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. இதில் கவனிக்கத்தக்க 10 திட்டங்களை பார்க்கலாம்.

அனைவருக்கும் வங்கிக் கணக்கு: நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கிசேவை கிடைக்க வேண்டும் என்றநோக்கத்தில் பிரதமரின் ஜன்தன் யோஜனா திட்டம் 2014-ல் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்குவோர் குறைந்தபட்ச இருப்பு வைக்கத் தேவையில்லை. இதுவரை 51.32 கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கணக்குகளில் ரூ.2,11,290 கோடி இருப்பு உள்ளது.

ஸ்மார்ட் சிட்டி: இந்திய நகரங்களை நவீன தரத்தில் மேம்படுத்தும் நோக்கில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் 2015-ஜூன் மாதம்அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியா முழுவதும் 100 நகரங்கள் நவீனப்படுத்தப்படு வருகின்றன.

ஸ்டார்ட்அப் இந்தியா: ஸ்டார்ட்அப்நிறுவனங்களை ஊக்குவிக்க ஸ்டார்ட்அப் இந்தியா திட்டம் கொண்டுவரப்பட்டது. 2016-ம் ஆண்டில் நாட்டில் 450 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 1 லட்சத்தைத் தொட்டுள்ளது.

திவால் சட்டம்: நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் திவால்நிலைக்கு தீர்வு காண்பது தொடர்பானவிரிவான கட்டமைப்பை வழங்குவதற்காக 2016-ம் ஆண்டு திவால் சட்டம் இயற்றப்பட்டது. நடப்பு நிதியாண்டில் 7,058 புகார்கள் பெறப்பட்டு 5,057 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பு: 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது எனபிரதமர் மோடி அறிவித்தார். கருப்பு பணப்புழக்கத்தை ஒழிக்கவும் ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசு குறிப்பிட்டது.

சரக்கு மற்றும் சேவை வரி: 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி சரக்கு மற்றும்சேவை வரி (ஜிஎஸ்டி) அமலுக்கு வந்தது.பல்முனை வரி கட்டமைப்பை ஒருமுனை வரியாக மாற்ற ஜிஎஸ்டி அறிமுகம்செய்யப்பட்டது. இப்போது மாதாந்திர சராசரி ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.66 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

ஏழைகளுக்கான மருத்துவக் காப்பீடு: ஏழை மக்களுக்காக பிரதமரின் ஜன்ஆரோக்ய யோஜனா என்ற மருத்துவ காப்பீட்டு திட்டம் 2018-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பட்டியலிடப்பட்டமருத்துவமனையில் ரூ.5 லட்சம் வரையில் பணம் இல்லாமல் சிகிச்சை பெற முடியும். இதில் இதுவரை 4.13 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை: 2019-ம் ஆண்டு பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருவாய் ஆதரவு அளிக்கும் இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இதில் சுமார் 12 கோடி விவசாயிகள் பயனடைகின்றனர்.

புதிய வருமான வரி நடைமுறை: கடந்த 2020-ம் ஆண்டு புதிய வருமானவரி நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தனிநபர்களுக்கு ரூ.7 லட்சம் வரை வரி விலக்கு உள்ளது. ஆனால் எவ்வித வரிவிலக்கும் கோர முடியாது.

சுயசார்பு பயணம்: சுயசார்பை இலக்கை அடைவதற்காக உள்நாட்டு தயாரிப்பை ஊக்குவிக்க முடிவு செய்த மத்திய அரசு 2020 மார்ச் மாதம் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகை (பிஎல்ஐ)திட்டத்தை அறிவித்தது. இதன் மூலம் குறிப்பிட்ட சில துறைகளுக்கு உற்பத்திக்கு ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in