

பங்குச் சந்தை பற்றி பயம் தேவையில்லைநம்முடைய சேமிப்பு பணத்தை வளரவைக்க வைப்பு நிதி, தங்கம், ரியல் எஸ்டேட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வது குறித்து பார்த்தோம். இந்த வரிசையில் பங்குச்சந்தை முதலீடு குறித்து பார்ப்போம்.
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்ற கேள்வி எழும்.கடந்த20 வருடங்களில் சுமார் 17% , கடந்த 3 வருடங்களில் சுமார்26% வருமானத்தை கொடுத்துள்ளதாக புள்ளி விவரம் கூறுகிறது.சராசரியாக சுமார் 20% வரு
மானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.எனவே,நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்தால் பணம் பல மடங்காக பெருக வாய்ப்பு உள்ளது.
சின்னதாக ஒரு கணக்கை பார்க்கலாமா? - இப்போது ஒரு லட்சம் ரூபாயை 20% வருவாய் ஈட்டும் திட்டத்தில் முதலீடு (ஒரு முறை)செய்தால், கூட்டு வட்டி அடிப்படையில்60-வது வயதில் அது எவ்வளவு தொகையாக மாறும் என பார்ப்போம்.
மேற்கண்ட கணக்கில் இருந்து இரண்டு முக்கிய விஷயங்களை நாம் கவனிக்கவேண்டும். 1. முறையான முதலீட்டை செய்ய வேண்டும். 2. 30 வயதில் அல்லது அதற்கு முன்பே முதலீட்டை ஆரம்பித்தால்,அது60 வயதில் மிகப்பெரிய தொகையாக மாறுவதை புரிந்து கொள்ளலாம். இந்தியாவை பொருத்தவரை பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்கள் சுமார் 4 கோடி மக்கள். ஏன் இவ்வளவு குறைவான மக்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்கிறார்கள்? மீதி உள்ள மக்கள் பணத்தை என்ன செய்கிறார்கள் என்ற கேள்வியும் உண்டும். நாம் முன்பே இதைப் பற்றிய சில விளக்கங்களைக் கொடுத்துள்ளோம். பெரும்பாலானவர்கள் தங்கள் பணத்தை குறைந்த வருமானம் வரும் வைப்பு நிதியில் முடக்கி வைக்கிறார்கள். அடுத்தகட்டமாக, நகைகள் , வீடு மற்றும் நிலத்தில் முதலீடு செய்கிறார்கள். ஒரு விஷயத்தில் இது எல்லாம் நல்ல விஷயம்தான். ஆனால், அதிக வருமனம் கொடுக்கும் பங்குச்சந்தையில் அவர்கள் இருப்பது இல்லை.
அவ்வளவுதானா? நம் இளைய சமுதாயம் என்ன செய்கிறது? துரு துரு என்று இருக்கும் நம் இளைஞர்கள், பறக்கிறதை பிடிக்கலாம்னு, இருப்பதை இழப்பதைப்போல் 'பிட்காயின்' போன்ற அடிப்படை ஆதாரம் இல்லாத வியாபாரத்தில் பணத்தை போடுகிறார்கள். இந்தியாவில் 4 கோடி மக்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் நிலையில், சுமார் 8 கோடி மக்கள் பிட்காயினில் பணத்தைப் போடுகிறார்கள். இதில் பெரும்பாலானவர்கள் போட்ட முதலீட்டையும் இழந்து நிற்கிறார்கள். படித்த இளைஞர்கள் இப்படி இருக்க, மற்ற பெரும்பான்மையான மக்கள், யாரோ ஒரு சிலருக்குக்குத்தான் கோடி ரூபாய் கிடைக்கும் என்றாலும், தொடர்ந்து லாட்டரி சீட்டு வாங்குபவர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதாவது பங்குச்சந்தை, பிட் காயின் மற்றும் வேறு வகையில் முதலீடு செய்பவர்களுடன் ஒப்பிடும்போது, லாட்டரி சீட்டு வாங்குபவர்கள்தான் அதிகம். இதையெல்லாம் தாண்டி அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்படாத பல்வேறு நிதிநிறுவனங்கள், சிட் ஃபண்டுகள் இன்னும் பெயர் தெரியாத பல்வேறு திட்டங்களில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை ஏராளம்.
பங்குச்சந்தை முதலீட்டின் பலன்கள்?
# 15-20% வருமானம் ஈட்ட வாய்ப்பு
# சிறிய முதலீட்டில் முதலீடு செய்ய முடியும்
# எப்போது வேண்டுமானாலும் விற்று பணமாக்கலாம்
# சிலவகை முதலீட்டுக்கு வருமானவரி விலக்கு உண்டு
# முதலீட்டின் முதல் 1 லட்சம் லாபத்துக்கு வரி விலக்கு
# நீண்டகால முதலீட்டின் லாபத்துக்கு 10% மட்டுமே வருமான வரி இப்படி பல்வேறு வகையான நல்ல விஷயங்கள் இருந்தாலும், பங்குச்சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அதற்கான காரணம் பங்குச்சந்தை பற்றி அறியாமையே ஆகும். இன்னும் சிலருக்கு பங்குச்சந்தை என்றால் இழப்பு ஏற்படும் என்ற பயமே ஆகும். இன்னும் பலருக்கு பங்குச்சந்தை என்றால் ஒரு சூதாட்டம் என்ற எண்ணமே ஆகும். இந்த எண்ணத்திற்கெல்லாம் காரணம், நிதி சார்ந்த விழிப்புணர்வு இல்லாததே ஆகும். நாமும் பணக்காரர் ஆகலாம். தொடரை தொடர்ந்து படிப்பவர்களுக்கு நிதித்துறை சார்ந்த அடிப்படை கல்வி கொடுப்பதே நமது நோக்கம்.
- trarulrajhan@ectra.in