

இந்திய மக்கள் தொகையில் 48 கோடி பேர் வேலைவாய்ப்பில் உள்ளனர். நாட்டின் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் வேளாண் துறை 44%, சேவைத் துறை 31%, தொழில் துறை 25% பங்கு வகிக்கிறது. இந்தியாவில் வேலைவாய்ப்பானது அமைப்புசாரா மற்றும் அமைப்புசார் என இருவகையில் அணுகப்படுகிறது. கட்டுமானத் தொழில், சிறு தொழில், சாலையோர வியாபாரங்கள் உள்ளிட்டவை அமைப்புசாரா தொழில்களின் கீழ் வருபவை. இந்தியாவில் 94% பேர் அமைப்புசாரா துறையிலேயே வேலைவாய்ப்புப் பெற்றுள்ளனர்.
அமைப்புசார் துறையில் (அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள்) வேலை செய்யும் மக்களின் எண்ணிக்கை 6 சதவீதமாக உள்ளது. வேலை
பாதுகாப்பு, ஊழியர்களுக்கான உரிமைகள் அமைப்புசார் துறையிலேயே உறுதி செய்யப்படுகிறது. எந்தெந்த நிறுவனங்கள் வழியாக அமைப்புசார் வேலைவாய்ப்புகள் அதிகம் உருவாகி வருகின்றன, அமைப்புசார் வேலைவாய்ப்பில் எந்தெந்த மாநிலங்கள் முன்னிலையில் இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்.
அதிக ஊழியர்களைக் கொண்ட அமைப்புகள்
அமைப்புசார் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் டாப் 5 மாநிலங்கள்
இந்தியாவின் மொத்த அமைப்புசார் வேலை உருவாக்கத்தில் இந்த ஐந்து மாநிலங்களின் பங்களிப்பு 59 சதவீதம் ஆகும்.