50% செல்வத்தை நன்கொடை வழங்கும் இந்திய தொழிலதிபர்கள்

50% செல்வத்தை நன்கொடை வழங்கும் இந்திய தொழிலதிபர்கள்
Updated on
3 min read

தான் சேர்த்த செல்வத்தை சமூக பணிகளுக்காக செலவிடுவதில் வெகுசிலரே ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், தனது செல்வத்தில் பெரும் பகுதியை அதாவது பாதியை நன்கொடை வழங்க முன் வந்துள்ளவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த வரிசையில் உள்ளவர்கள் குறித்து பார்க்கலாம்.

நிகில் காமத்

இந்திய தொழில் முனைவோரில் இளையவர். ஸெரோதா நிறுவனத்தின் நிறுவனர். இவர் உலகெங்கிலும் உள்ள பல செல்வந்தர்களுடன் இணைந்து காலநிலை மாற்றம், கல்வியை மேம்படுத்துதல் மற்றும் சுகாதார பணிகளுக்காக தனது செல்வத்தில் 50 சதவீதத்தை நன்கொடை வழங்க உறுதி கொண்டுள்ளார்.

ரத்தன் டாடா

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, இந்தியாவின் செல்வாக்கு மிக்க தொழிலதிபர். தாராள நன்கொடையாளரான இவர், வெள்ளம், பஞ்சம், நிலநடுக்கம் உள்ளிட்ட இயற்கைப்பேரிடரால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணம் வழங்கி வருகிறார். இதுபோல பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டவும் நன்கொடை வழங்கி வருகிறார்.

மஜும்தார்-ஷா

பயோகான் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக இயக்குநருமான கிரண் மஜும்தார் ஷா, வளரும் நாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய நலப் பணிகளில் தனது பாதிசெல்வத்தை செலவிடுவதில் அதிக ஆர்வம்காட்டி வருபவர். இதுகுறித்து அவர் கூறுகையில், “உலகளாவிய சுகாதாரத்தில் நலப் பணிகளை மேற்கொண்டு வளரும் நாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது கனவு. புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் ஏழை நாடுகளின் மக்கள் மீது தாங்க முடியாத நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பங்கினருக்கு தரமான சுகாதாரப் பாதுகாப்பு இல்லை. இந்த உண்மையை அறிந்து கொண்டு அதனை நோக்கியே எனது பணிகள் தொடர்கின்றன” என்று தெரிவித்துள்ளார்.

நந்தன் நிலகேனி

இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், தலைவருமான நந்தன் நிலகேனி, அவரது மனைவி ரோகினி நிலகேனி ஆகியோர் தான் சேர்த்த செல்வத்தில் 50 சதவீதத்தை சமுதாய நலப் பணிகளுக்கு செலவிட முடிவு செய்துள்ளனர். இவர்கள், வாரன் பஃபெட், பில் கேட்ஸ் உடன் இணைந்து சமுதாய முன்னேற்றத்துக்கான பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.நிகில் காமத்
இந்திய தொழில் முனைவோரில் இளையவர். ஸெரோதா நிறுவனத்தின் நிறுவனர். இவர் உலகெங்கிலும் உள்ள பல செல்வந்தர்களுடன் இணைந்து காலநிலை மாற்றம், கல்வியை மேம்படுத்துதல் மற்றும் சுகாதார பணிகளுக்காக தனது செல்வத்தில் 50 சதவீதத்தை நன்கொடை வழங்க உறுதி கொண்டுள்ளார்.

அசிம் பிரேம்ஜி

விப்ரோ நிறுவனத்தின் தலைவர் அசிம் பிரேம்ஜி சமூக பணிகளுக்காக நன்கு அறியப்பட்டவர். இவர் தனது வருமானத்தில் கணிசமான தொகையை சமூக தொண்டுகளுக்காக செலவிட்டு வருகிறார். அவர் இதுவரை தனது தொண்டு நிறுவனத்துக்கு
21 பில்லியன் டாலரை வழங்கியுள்ளார். 2020-ம் ஆண்டில் அவரது அறக்கட்டளை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு150 மில்லியன் டாலரை வழங்க உறுதியளித்தது.

ஷிவ் நாடார்

ஹெச்சிஎல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் கடந்த 2022-ல் ரூ.1,161 கோடி நன்கொடை வழங்கி உள்ளார். இதன்மூலம் எடல்கிவ் ஹுருண் அமைப்பின் கடந்த ஆண்டுக்கான நன்கொடையாளர்கள் பட்டியலில் (தனி நபர் பிரிவில்) முதலிடம் பிடித்துள்ளார். 77 வயதான ஷிவ் நாடார் ஒரு நாளைக்கு ஏழை மக்களின் நலப்பணிகளுக்காக 3 கோடி ரூபாயை தானமாக வழங்கி ‘தாராள பிரபு’என்ற பட்டத்தை அடைமொழியாக்கிக் கொண்டுள்ளார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in