வாடிக்கொண்டிருக்கும் காடுகள் காப்பாற்றப்படுமா?

வாடிக்கொண்டிருக்கும் காடுகள் காப்பாற்றப்படுமா?
Updated on: 
2 min read

‘பசுமை இந்தியா இயக்கம்’ (Green India Mission - GIM) என்பது பிப்ரவரி 2014இல் தொடங்கப்பட்ட, இந்தியாவின் ‘காலநிலை மாற்றத்துக்கான தேசியச் செயல் திட்ட’த்தின் (NAPCC) கீழ் உள்ள எட்டுத் தூண்களில் ஒன்று.

மத்திய சுற்றுச்சூழல், வனம் - காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ் இது தொடங்கப்பட்டது. இது காடுகளைப் பாதுகாப்பது, மறுசீரமைப்பது, மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் காடு சார்ந்த சூழலியல் தொகுதிகளை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும். காலநிலை மாற்றத்தை மட்டுப்படுத்துதல், தகவமைப்பு உத்திகள் ஆகியவற்றின் மூலம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

கார்பனைக் குறைப்பதற்கான மத்திய அரசின் கொள்கையில் இந்தத் திட்டம் ஒரு முக்கிய அங்கம். தேசியக் கொள்கையின்படி 33% காட்டுப் பகுதிப் பரப்பை அடைவதற்கும், 2030ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் காலநிலை மாற்றக் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பசுமை இந்தியா இயக்கத்தைத் திறம்படச் செயல்படுத்துவது மிக அவசியம்.

2030ஆம் ஆண்டுக்குள் கார்பனை உறிஞ்சும் வழியை 250 கோடி டன்னில் இருந்து 300 கோடி டன்னாக அதிகரிக்க பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. சூழலியல், பல்லுயிர்ப் பெருக்கம், நீர் - உயிரினங்களின் வாழிடத்தை மேம்படுத்துதல் போன்றவையும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

கள நிலவரம்

இந்தக் கனவுத் திட்டம் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியிருப்பது இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வழங்கிய அறிக்கையில் இருந்து தெரியவந்துள்ளது. ‘இந்தியக் காடுகளை மேம்படுத்துவதற்காகப் போடப்பட்ட திட்டத்தால் 10 ஆண்டுகளைக் கடந்தும் பெரிய முன்னேற்றமில்லை’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்திட்டம் 14 லட்சம் ஹெக்டேர் பரப்பளவுக் காடுகளின் தரத்தை மேம்படுத்த வேண்டியுள்ள நிலையில், உண்மையில் 1 லட்சம் ஹெக்டேர் அளவு மட்டுமே முடிந்துள்ளது. திட்டத்தில் இலக்காகக் குறிப்பிடப்பட்டுள்ள அளவில் பத்தில் ஒரு பங்குப் பரப்பளவுகூட எட்டப்படவில்லை. காடுகளின் பரப்பை அதிகரிப்பதில் இந்த திட்டம் 4 சதவீதம் மட்டுமே எட்டியுள்ளது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in