

குறிஞ்சி படம்: சத்திய செல்வம் | நாமத்தாவி | Small Cupid படம்: சந்தியா |
சென்னைப் பெருநகரம். சாலைகளில் பரபரப்பாக, வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள்; வானுயர்ந்த அடுக்கு மாடிக் கட்டிடங்கள்; பெரு வணிக நிறுவனங்கள்; இவற்றுக்கு நடுவே எவ்விதப் பரபரப்புமன்றி பச்சைப் போர்வை போர்த்தியதுபோல் பசுமையாக ஒரு மலை.
குரோம்பேட்டை சாலை வழியே செல்லும் பலரும் இம்மலையைக் கவனித்திருக்கக்கூடும். ஆனால், அதன் பெயரை அறியாமல் ஏதோ ஒரு மலை என்று கண்டும் காணாமல் கடந்து சென்றிருக்கக்கூடும்.
அரிய தாவரங்கள்
பச்சைமலை பெயருக்கு ஏற்றவாறு பச்சைப் போர்வை போர்த்தியதுபோல் தாவரங்களால் சூழப்பட்டிருக்கிறது. இம்மலை வெப்பமண்டல உலர் இலையுதிர் காடு (Tropical Dry Deciduous Forest) வகையில் அடங்கும் என்கிறார் மூத்த தாவரவியல் பேராசிரியர் நரசிம்மன். Strobilanthes Cordifolia என்னும் தாவரவியல் பெயர் கொண்ட குறிஞ்சி வகை பச்சைமலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.