

முட்டை என்பது தேர்வு மதிப்பெண், விளையாட்டுப் போட்டிகளுக்கான புள்ளிகளோடு தொடர்புப்படுத்திக் கிண்டலடிக்கப்படுகிறது. ஆனால், முட்டை என்பது உண்மையில் ஒரு பரிணாம அதிசயம். முட்டை ஏன் கோளமாகவோ, நீள்கோளமாகவோ (ellipsoid) இல்லை. ஏன் முட்டை, முட்டை வடிவத்தில் இருக்கிறது?
இயந்திர உறுதித்தன்மை: முட்டைக்கு இரண்டு முனை இருக்கிறது. ஒரு முனை சற்றுக் கூரான முனை. மற்றொரு முனை நன்கு வளைந்த முனை. கூரான முனை அதிகப்படியான அழுத்தவிசையைத் தாங்கக்கூடியது. ஒரு வேளை முட்டை வட்டமாக, அதாவது கோள வடிவில் இருந்தால் முட்டை மேல் கோழியோ வேறு பறவையோ உட்கார்ந்து அடைகாக்கும்போது மிக எளிதாக உடைந்துவிடும்.