

அடிப்படையில் புலிகள் காடுகளுக்குள் அதற்கான எல்லைகளை வகுத்துக் கொண்டு வாழும் ஓர் உயிரினம். ஓர் ஆண் புலி மற்றோர் ஆண் புலியைத் தன் எல்லைக்குள் அனுமதிக்காது. புலிகள் காரண மின்றித் தங்கள் காடுகளை விட்டு வெளியேறுவது இல்லை. ஒரு புலி அதன் எல்லைக்கு வெளியே வருவது என்பது, அதன் வாழ்விடத்திற்குள் ஏதோ மாறிவருவதன் அறிகுறியே.
அதிகரித்துவரும் புலிகளின் எண்ணிக்கை, இளம் புலிகளுக்குப் புதிய வாழ்விட எல்லைப் பிரச்சினையை உருவாக்குகிறது. உணவு, பாதுகாப்பான இடத்தைக் கண்டறிய, மற்ற புலிகளின் எல்லைகளைப் புதியவை பகிர்ந்து கொள்ள முற்படும்போது, அங்குள்ள வலிமையான ஆண்புலிகளுக்கு இடையே மோதல் ஏற்படும்.